பறவைகள்

நீண்ட ஒர் நீல்(ஜாதி)கடல்
தாண்டி வந்தேன்
நீ தரும் நிஜத்தினில்
வாழ வந்தேன்

இருபுற இறகுகள்
துவண்டு போக அது என்
இருதயத் தவிப்பினில்
தொலைந்து போக
களைப்புகள் மறந்து நான்
கடந்து வந்தேன் உன்
கவலைகள் குறைத்திட
தடை உடைத்து வந்தேன்

கூண்டிட்ட ஜாதிகள்
இங்கு இல்லை
கூடி நாம் வாழ்வோம்
இங்கு ஏது தொல்லை. .....?
சுதந்திரச் சிறகுகள் கிடைத்த பின்னே
சுவர்கமும் அருகில்தான் மகிழ்வோம் கண்ணே

எழுதியவர் : கவியரசன் (24-Sep-14, 10:44 pm)
Tanglish : paravaikal
பார்வை : 124

மேலே