பதிப்பு

மறத்தலுக்கு சாத்தியமற்ற
முதலாய் அழுந்தப் பெற்ற
ஈரமேறிய அந்த
முத்த பதிப்பின் கிளர்ச்சி
நிமிடங்களை வடிக்க
ஏதேனும் மொழியிருக்கிறதா?

மெத்தென பற்றி
உயிர் பறித்த அந்த
கலப்பு நிமிடங்களில்
உந்தப் பட்ட காமத்தின்
வெம்மையில் ஜென்மங்களாய்
கற்க மறந்த பாடத்தின்
பக்கங்கள் மீண்டும் திறக்க...
பற்றுதலுக்காய் துவளும்...
கொடி போல.. கிறங்கிக்
கிடந்த நிமிடங்களின்
சாயலில்தான் சொர்க்கம்
என்ற சூத்திரத்தின்
மூலம் பிறந்திருக்குமோ...!

வசீகர பரிமாற்றத்தின்
அழுத்தமான பற்றியிழுப்பு
முன் பின்னாய் கலைத்துப் போட்ட
அந்த முதல் நாளின்
தனித்த இரவில்
பிறழ்ந்து போன உறக்கத்தில்
ஏக்கமாய் என்னுள் நிறைந்த
சூட்சும காதல் இட்ட முடிச்சுகள்
கடத்திச்செல்கின்றன ..
மீண்டும் மீண்டும்
அந்த முத்த நிமிடங்களுக்கு...!

எழுதியவர் : Dheva .S (24-Sep-14, 10:43 pm)
Tanglish : pathippu
பார்வை : 68

மேலே