இரவுகளில் புது உலகம்
![](https://eluthu.com/images/loading.gif)
கருமைகளின் நிரந்தர அரங்கேற்றம் ....
விடியல்களின் ஒத்துழுயாமை இயக்கம் .....
நிலவுகளின் தினசரி கண்காணிப்பு ........
விண்மீன்களின் பொழுதுபோக்கு நிகழ்ச்சி.......
நிறம் அறியாத உருவங்களின்
பாகுபாடற்ற அரவணைப்பு .........
தவணை முறையில்
மரகிளைகளின் கூட்டல் படிப்பு .....
உணவு கேட்கும் உணர்வுகளுக்கு
பசித்தீர்ந்துவிட்டது என்று சொல்லும் சமிக்சை காதலி ......
காற்றின் வாசிப்பில் விமானங்களின் தாலாட்டு .......
தொடர்கதையான வாழ்க்கை இப்படியிருந்தால் !!!! எப்படியிருக்கும் ?
நகரமயமாதல் இல்லாமலே போகும் ......
வேலையில்லா திண்டாட்டம் தீரும் .......
காதல் கற்பனையில் கர்ப்பம் தெறிக்கும் .......
மின்சார பற்றாக்குறை குழம்பி நிற்கும் .....
மாற்றுத்திறனாளிகளுக்கும் நமக்கும் ஒரே இடமாகும் .....
அரசியல் கட்சிகள் அழிந்தே போகும் ...
சலுகைகள் சமமாகி போகும் ....
இணையதளங்கள் இல்லாமல் போகும் ....
மாற்றம் என்பது காணாமல் போகும் .......
எல்லாம் நிகழும் !!!!!
மனிதனின் பிறப்பையும் இறப்பையும் தவிர...
எல்லா உலகத்திலும் மனிதனின் கற்பனைக்கு எட்டாதது அது ஒன்று தான் ............