பார்வை ஒன்றே போதுமே
மௌனமாய் ஒரு கோரிக்கை
திறம் பெற்ற இறைவனிடம்
வரம் கேட்கும் பக்தனைப் போல்,..
அரிதில் கிடைப்பதில்லை
எனினும் தவம் கலைவதில்லை,..
நீ மலை
நான் மேகம்
நான் மோதி நீ வீழப்
போவதில்லை...
எனினும்
என் மோதல் ஓயப் போவதில்லை...
எத்தனை முறை அடக்கி
ஆளப்பட்டிருக்கிறேன்
உன்னால்.,
ஒரு கருணைக் கல் வீசி எறி
உன் கண்ணால்.,
நீ
என் வழியெல்லாம் துணை
வர வேண்டாம்,.
வாழ்வெல்லாம் இடம் பெற
வேண்டாம்,.
அடை மழையாய் தினம்
தீண்ட வேண்டாம்,
ஊடல் கூடல் ஏதும் வேண்டாம்,.
ஆறுதலாய் பார்த்துப் போ...
என் வாழ் நாளை நீட்டிப் போ.