தண்டனை

தப்பு செய்யாத என்னை
தவறுதலாய் செய்த தவறுகளை காட்டி
தீர்ப்பு எழுதிப்போகிறாய் ....

தண்டனையை எழுதுவதெல்லாம்
உன் வாய் மறைந்த வார்த்தைகள்தான்
தண்டனையும் இன்னதென அறியாமலே
ஆயுள் முழுதும் அனுபவிக்க சொல்கிறாய்

தண்டனையை வழங்கிவிட்டு
தனிமை சிறையில் வைக்கிறாய்
மௌனமெனும் இரவுகளில்
கலைகிறது என் விடியல் .....

கரைகிறது என் ஆசையோடு சேர்ந்த கனவுகளும்
வாழ்க்கையெனும் வண்ணங்களும்

இனியும் ஒருமுறை தண்டிப்பதென்றால்
தயை கூர்ந்து கேட்கிறேன்
அரை நொடிக்கொருமுறை கொல்லும்
ஆயுள் தண்டனை வேண்டாம்

நொடியில் உயிர்போகும்
மரணதண்டனை மட்டும் கொடுத்துவிடு
அதுவும் உன் மடிமீது ......



கவிதாயினி நிலாபாரதி

எழுதியவர் : கவிதாயினி நிலாபாரதி (27-Sep-14, 6:21 pm)
Tanglish : thandanai
பார்வை : 107

மேலே