உன்விழி வரையாத கோணமோ - இராஜ்குமார்

உன்விழி வரையாத கோணமோ
==============================

கோபமாய் கொஞ்சம்
உன்விரல் விரைந்து கீறுமோ ?
எனை நகத்தில் மிரட்ட

தோல்வி தழுவ
உன்பாதம் போரை துவக்குமோ ?
எனை வீரமின்றி வீழ்த்த

கல்வியில் கற்காத
உன்விழி வரையாத கோணமாகுமோ ?
எனை தேடலில் புதைக்க

உன்னத வார்த்தை
உன் உதட்டில் உதிருமோ ?
எனை காதலில் செலுத்த

- இராஜ்குமார்

நாள் ; 1 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (28-Sep-14, 12:48 pm)
பார்வை : 105

மேலே