வாட்டும் தீ

தூக்கிப் போடு!
வேலைகளை!
தூக்கம் போதும்
நேற்று வரை ....

ஏக்கம் என்னை
எரிக்கிறது...
தாக்கும் காமம்
சுடுகிறது....

முந்தய நாளை
எண்ணிடத்தான்
சிந்தனை ஆளை
சிதைக்கிறது...

வந்திடு கணவா!
வாடுகிறேன்...
தந்திடு உனையே!
நாடுகிறேன்....

பரவும் வெப்பம்
பனியாக்கி..
வியர்வை மழையில்
குளித்திடுவோம்!..

சிரமம் இல்லை
சிறுநேரம்...
வரம்பு மீறிப்
பார்த்திடுவோம்!...

சத்த முத்தம்
மொத்தம்தா!...
'சமரச யுத்தம்'
நித்தம்தா!...

சுகத்தின் தேடல்
சுகமாக...
இகத்தை மறந்து
இணைந்திருப்போம்!...

எழுதியவர் : அபி @ முஹம்மது நௌபல் (28-Sep-14, 12:04 pm)
Tanglish : vaatum thee
பார்வை : 131

மேலே