+காதல் பரிட்சை+
ஏதோ தொடர்பினில்
நானும் தொடர்கிறேன்!
நீயோ தொலைவினில்
மறைந்தே தொலைகிறாய்!
காதல் மோகத்தில்
கவிதை வடிக்கிறேன்!
வெள்ளை மேகத்தில்
புகையாய் கலக்கிறாய்!
கனவே நினைவென
நினைவே கனவென
சுற்றும் பூமியில்
மனதும் சுழலுதே!
கனவே நிஜமென
என்னைச் சேர்ந்திடு!
காதல் பரிட்சையில்
தேர்ச்சி கொடுத்திடு!