படித்ததில் கொதித்தது- மனிதஉரிமை செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை

படித்ததில் கொதித்தது- மனிதஉரிமை செயற்பாட்டாளருக்கு மரண தண்டனை.!.

பாக்தாத்,- இராக்கில் மனித உரிமை செயற்பாட்டாளராக இயங்கி வந்த பெண் வழக்கறிஞர் சமிர் சலி அல் நுயாமியை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டு துடிக்க துடிக்க கொன்றனர்.

இராக் மற்றும் சிரியாவின் ஐஎஸ்ஐஎஸ் சில பகுதிகளை கைப்பற்றி அதனை இஸ்லாமிய தேசம் என அறிவித்து செயல்பட்டு வருகிறது. இராக்கின் மிகப்பெரிய இரண்டாவது நகரமான மொசூலையும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். இங்கு ஏற்கனவே பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமைக்கான செயற்பாட்டாளராக வழக்கறிஞர் சமிர் சலி அல் நுயாமி இருந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 17ம் தேதி தனது முகநூல் பக்கத்தில் இராக்கின் முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் இராக்கின் முக்கிய மத மற்றும் சமய அடையாளங்களை அழித்து வருகின்றனர். இது வேதனையளிப்பதாக இருக்கிறது என கருத்து தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ஆத்திரமடைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் நுயாமியை கைது செய்து, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்திருக்கும் நீதிமன்றத்தில் நிறுத்தினர். பின்னர் இவர் இஸ்லாமிய மத அடிப்படையிலான கோட்பாடுகளுக்கு எதிராக செயல்படுவதாக குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து அந்த நீதிமன்றம் அவரை குற்றவாளி என்று அறிவித்ததுடன், அவரை பொதுமக்கள் முன்னிலையில் தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என ஐஎஸ்ஐஎஸ் உத்தரவிட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து நுயாமியை 5 நாட்கள்தீவிரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து சித்ரவதை செய்திருக்கின்றனர்.

அதற்கடுத்து செப்டம்பர் 22ம் தேதி பொதுமக்கள் முன்னி லையில் நுயா மியை துடிக்க துடிக்க தூக்கிலிட்டு கொன்றிருக்கின்றனர். இச்சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. இது மனிதாபிமானமற்ற கொடூர, காட்டுமிராண்டித்தனமான செயல். மனித உரிமைகள், பெண்உரிமை என்று எதையுமே மதிக்காமல் மனிதத் தன்மைக்கு எதிராக செயல்படுவதாக ஐ.நாவிற்கான இராக் பிரதிநிதி நிக்கோலாய் மிலேடெனொவ் தெரிவித்திருக்கிறார்.

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (28-Sep-14, 10:41 pm)
பார்வை : 228

மேலே