வெள்ளைத் தாளின் விதைகள் - இராஜ்குமார்

வெள்ளைத் தாளின் விதைகள்
==========================

உன்விழிகளை கண்ட
கணங்களின் காய்ச்சலே
எனது காதலின் பாய்ச்சல்

என் கன்னத்தை
நானே அறைந்தாலும்
உன் பெயரால் துடிக்கும்
இதயத்தை எப்படி அடிப்பேன் ?

நான் காதலித்த
உன் நினைவெனும்
கவிதைகளை
வெள்ளைத் தாளில்
ஏன் விதைக்கிறேன்..?

தாளில் முளைக்கா
அக்கவிகளுக்கு
இன்று வரை தெரியாது
நீ வெறுத்தக் காதலில்
விதைகளே இவையென்று ..

- இராஜ்குமார்

நாள் ; 5 - 9 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 8:41 am)
பார்வை : 116

மேலே