வெறுமை
சிறு குளத்தின் அருகே
சிறு சிறு கல்லை எரிந்து
சிதறும் நீரை ரசித்ததில்
சிறகடித்து வானில் பறந்தவள் !!
ஓர்நாள் !!
தெரிந்தோ
தெரியாமலோ
அவன் சென்ற பாதையில்
அவனை நோக்கி சென்றதால் !!
எனை
நெருங்கி நெருங்கி வந்து
நெஞ்சத்தில் குடி கொண்டவன்
நேற்று வரை என்னோடு இருந்தவன் !!
இதழ்கள் அறியா
இன்னிசையை
இதழோடு இதழ் வைத்து
இதமாய் கற்று தந்தவன் !!
விழித்து இருந்தும்
விடை அறியா
வினாக்களுக்கு
விழி மூடி கற்றுகொடுத்தவன் !!
இன்று காலம் செய்த தவறா ?
இல்லை இதயம் செய்த தவறா ?
என அறியாதவாறு
சிறிதும்
சிந்திக்காமல்
சிதைத்து விட்டான்
என் முழு சிந்தனையை !
சிறு துளி கண்ணீரால்
சிறிது சிறிதாய் சிதைந்து
சிந்தை எல்லாம் வெறுமை ஆனது !!