கண்ணீர் தேசம்
அன்பே
என்னை
கவிஞனாய் மாற்ற
பழகிவிட்டு
கணவனாய் ஏற்க மட்டும்
ஏனடி மறுத்தாய்...!
உன்னோடு
பழகிய நாட்களெல்லாம்
கத்தி கம்போடு
என்னை தேடிக்கொண்டிருகின்றன...!
உன் நினைவுகளை
சுமந்து நிற்கும்
என் நெஞ்சமோ
தீயின் அளவை
தீவிரப்படுத்தி இருக்கிறது ...!
என் இதய வீதியில்
எத்தனையோ பைங்கிளிகள்-என்னை
பார்த்து நடந்தார்கள்,,,!
ஆனால் !
நீ மட்டும் தான்
என் கையை
கோர்த்து நடந்தாய்...!
காதல் தேசம் செல்லத்தான்
கரம்பிடித்தாய் என நினைத்தேன் ...!
நீ
விட்டு சென்ற பின்பு தான்
தெரிந்தது
அது கண்ணீர் தேசம் என்று....!
விட்டு சென்றது
நீயாக இருப்பதாலோ என்னவோ
சுடுகின்ற கண்ணீர் கூட -எனக்கு
சுகமாகவே இருக்கிறது ....!