சாதி மதங்கடந்து

விடிகாலை பொழுதுகளில்

கோவில்களில்
பள்ளிவாசல்களில்
தேவாலயங்களில்

மத போதை ஏற்றும்
ஒலிபெருக்கி சத்தங்கள் ....

சாதி மதங்கடந்து
எல்லோரும் எழுந்து
விழிப்புடன் உழைத்திட

எம்வீட்டுக் கூரை மீது
ஏறி நின்று
சங்கொலி கொண்டு முழங்கும்
கறுப்புச் சேவல் ஒன்று ...!

எழுதியவர் : சுப.முருகானந்தம் (28-Mar-11, 5:41 pm)
சேர்த்தது : சுப.முருகானந்தம்
பார்வை : 408

மேலே