இழுவிசையாய் இசை
![](https://eluthu.com/images/loading.gif)
ஈரமாய் உதிர்ந்திருந்தது
ராகம்..!!
இன்பமாய் திணறியிருந்தது
துளை...!!
புல்லாங்குழல்
இசைத்துக் கொண்டிருக்கிறாய்
நீ.........!!
வில் "யாழ்"
மீட்டத் தொடங்கியிருந்தாள்
ஒரு வேல்விழி"யாள்"
கண்களும் காதுகளும்
செய்தி கடத்தியிருந்தன
நாவுகளுக்கு... அமிழ்தின்
சுவை
இதுதானென்று......!!
காற்சலங்ககைகளிடம்
வேண்டியிருந்தது..... நீ
மார்பணைத்த பறை....!!
அடிக்காமலேயே
அதிர்ந்திருக்கிறேன்....
கொஞ்சமாய் கழண்டுபோ..
நான்... சுவாசிக்க
வேண்டும்....!!!
வளைந்தேறிக்
கொம்பூதுகிறாய்...
நிழல் இசைக்க...
நிஜம் இசைவதைப்
போலிருந்தது
சத்தமெழும்பியிருந்த
அந் நிமிடங்கள்....!!