தேயாத நிலவினில் புதுமை நீ - இராஜ்குமார்

தேயாத நிலவினில் புதுமை நீ
=============================

கருகாத மேகத்தில்
மழைத்துளியாய் துள்ளுகிறாய்
சன்னலில் நுழையாத
தென்றலாய் வீசுகிறாய் ..!

நினைவுகளில் அலையாத
கனவுகளாய் மிதக்கிறாய்
நீரினில் உடையாத
நுரைகளாய் ஓடுகிறாய் ..!!

வாடாத மலரினில்
இதழ்களாய் விரிகிறாய்
தேயாத நிலவினில்
புதுமையாய் பிறக்கிறாய் ..!

குளிராத தேசத்தில்
பனித்துளியாய் விழுகிறாய்
எழுதாத வரிகளில்
வார்த்தையாய் ஒளிர்கிறாய்

- இராஜ்குமார்

நாள் ; 18 - 10 - 2011

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (29-Sep-14, 8:48 pm)
பார்வை : 129

மேலே