மது

மதுவினைக் குடித்தே நாளும்
....மதிதனைக் கெடுக்கும் தோழா !
பொதுவினில் பொல்லா பழக்கம்
....பொசுக்கிடும் உந்தன் வாழ்வை!
எதுதனில் இருக்கு இன்பம்
....என்பதைத் தேடி நீயும்
மதுதனில் உண்டே என்றே
....மயங்கியே அழிவ தென்னே?
புட்டியில் அடைத்த பூதம்
....புரிந்திட முடியா வாதம்
கெட்டியாய்ப் பிடித்து உன்னை
....கெட்டவன் ஆக்கி சாய்க்கும்
வட்டியாய் வளரும் போதை
....வற்றிட வைக்கும் வாழ்வை
எட்டிநீ போவாய் இன்றே
....ஏனிது? விட்டே போ!போ!