குழந்தை வீசாதே

தெருவோர நாய்கூட
தெளிவாய் இருக்குது
கருவளர்ந்த குட்டியதை
காக்கப் பாக்குது
கருமந்தான் டேய்மனிதா!
காமம் முடிஞ்சதும்
பெறுமந்த பிள்ளையினை
தூக்கி வீசுற !

ஒருமனிதன் ஒன்றல்ல
ஒருசமு தாயம்!
தெருவினிலே வீசிநீ
தேடும் நிம்மதி
விரைவினிலே மறைந்தோடும்
மனசில் வைய்யடா!
வரமதனை சாபமென
மாற்றா தேடா!

உன்சுகமே பெரிதென்றால்
உப்பி சாகுவாய்!
வன்முறையின் வாசலிலே
வாழ்ந்து வேகுவாய்!
இன்முகத்தை பார்த்தின்னும்
இரக்கம் வரலையா ?!
பொன்குழந்தை போற்றிடடா!
புத்தி மாறடா!

எழுதியவர் : அபி (30-Sep-14, 8:23 pm)
பார்வை : 130

மேலே