நான் செஞ்ச தவம்

காத்தடிக்க குளிரடிக்கும்
கம்பளியத் தேடும்மனம்
நேத்திருந்த அவவாசம்
நெஞ்செமெலாம் நிறைஞ்சிருக்கும்!

தாய்வீடு போயிருக்கா
தாரமா வந்ததங்கம்
நோயில்ல நோவுமில்ல
நோன்புன்னு சொல்லிவச்சா!

கண்ணாலம் கட்டி
காலம் மூனாண்டு!
எந்நாளும் பிரிஞ்சதில்லே
இப்போதான் போயிருக்கா!

கர்ப்பம் சொன்னதுமே
கைகால் ஓடலீங்க
நிற்கும் கடவுளேல்லாம்
கண்முன்னே வந்ததுங்க!

என்ஜன்மம் பயனடஞ்சேன்
ஏக்கம் விலகிடுச்சு
முன்ஜென்மம் நான்செஞ்ச
நல்லது விளஞ்சிருச்சு

புள்ளயில்ல என்றபேரு
புதஞ்சிதான் போயிருச்சு
தள்ளவில்ல எனைதெய்வம்
தாங்கிப் புடிச்சிருச்சு

எழுதியவர் : அபி (30-Sep-14, 9:20 pm)
பார்வை : 186

மேலே