தலையணைச் சண்டை
பயன்ற்ற உலக சாதனைகளை
பாராட்டிக் காட்டிட கின்னஸ் பதிவேடு
நேற்றைய சாதனை அமெரிக்காவில்
நாலாயிரத்து எண்ணூறு மாணவர்களின்
‘அரிய’ முயற்சியே அந்த சாதனை.
நட்புறவை வளர்க்க தலையணைச் சண்டை
உலகமே பார்த்து வியந்ததுவாம்
நமக்கும் போட்டியிட ஆசை வந்தால்
அவர்களின் சாதனையை முறியடிக்கலாம்
அதற்காகக் காத்திருப்போர் இருப்பதுண்மை
பள்ளிகளும் ’அரிய’ சாதனைகளை
கின்னஸ்சில் பதிவேற்றிக் காட்டுகின்றன
மனிதநேரம் வீணடிக்கும் சாதனைகளை
பாராட்டா மனிதரெல்லாம் மனிதர்களா?