சிறுவர் தின வாழ்த்துக்கள்

நதியினும் நீண்ட நடை எடு - தீய
நரிகளைக் கூண்டில் அடைத்திடு
மலைகளைத் தாண்டி ஏறிடு – அங்கோர்
மரத்தினை நட்டு எரு இடு

மனிதரில் உண்டு பல இனம்-தீய
மனிதனின் உள்ளம் சுகயீனம்
நல்லதை ஏற்று நடந்திடு – நீ
கெட்டதை ஏற்க மறுத்திடு

தடைகளைத் தாண்டி மடையுடை-நீ
மறுமைக்காய் வாழ்வினை துடை துடை
போட்டியின் தடைகளை உடை உடை-அஙகோர்
ஏழைக்கும் எழுத்தினை படை படை

நுட்பத்தின் நூதனம் நுணுக்கத்தை-நீ
நுனிவரை திறத்தால் கொண்டு செல்
நாளைய உலகின் நகர்தலை – நல்ல
தரத்தினில் நுகர்ந்திட சிகரம் செய்.

எழுதியவர் : imam (1-Oct-14, 2:53 pm)
பார்வை : 2008

மேலே