சுத்தமாக்குவோம் இந்தியாவை -பொள்ளாச்சி அபி

“இந்தியாவை சுத்தமாக்குவோம்”
பிரதமர் அறிவித்துள்ள திட்டம்

கங்கையிலிருந்து துவங்கி
கன்னியாகுமரி வரை..,
இது ரொம்ப நல்ல திட்டம்

தேசப்பிதா காந்தி பிறந்த நாளில்
துவங்குவதால் சிறப்பான திட்டம்கூட..,

குப்பைகூளம்,நெகிழி
சாலையில் மலம் என
தேசம் நிறைய மாசு
எல்லாம் சுத்தமாகும்..நம்புங்கள்
இது நல்ல திட்டம்தான்..!

இந்தியாவின் மாசு
இது மட்டும்தானா..?
சாதியும் மதமும்
பிரிவும் தாழ்வும்
கௌரவக் கொலைகளும்
வறுமையும் பிணியும்..என
இன்னுமுள்ள மாசுகளெல்லாம்
எப்போது சுத்தமாகும்..?
கேட்காதீர்கள்..!

மநுவின் நீதியில்..அதற்கு
பதிலேதும் இல்லையாம்..!

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (1-Oct-14, 5:05 pm)
பார்வை : 337

மேலே