பட்டணத்தில் பட்டிக்காட்டான்
கோட்டு சூட்டு போட்ட
மைனர் கூடவே
கொண்டு போகிறார்
மஞ்சப் பையை...!!!
நாகரீகம் தேடி
வந்த மைனர்
கொட்டித் தீர்க்கிறார்
நாட்டுப் புற வார்த்தையை
பிறர் மத்தியிலே...!!!
பட்டதாரிப் படிப்பு
பேச்சோ பச்சை
கொச்சை வார்த்தை
பட்டயைக் கிளப்புகிறார்
நாட்டாமை ஸ்டைலிலே...!!
கண்ணுக்கு விலை
உயர்ந்த கண்ணாடி
வாய்க்குள்ளே அமுக்கி
விட்டார் வெத்தலை
பாக்கு...!!!!
உடையை மாற்றினார்
பட்டணத்து மைனர் போல்
நடை பாவனையை
மாற்ற முடியில்லை...!!!!
நாலு கண்ணும்
பார்க்கின்றது
கிண்டல் கேலி
செய்கின்றது...!!!
பட்டணைத் தட்டி
உணவு எடுக்கும்
கடையில் நுழைகிறார்
பெருமையோடு உள்ளே
வந்து திரு திருவென
விழிக்கிறார் மழலை போல்...!!!
வெளியே சிரிக்கிறார்
உள்ளுக்குள் குமுறி
குமுறி அழுகின்றார்
பட்டணத்துப் பணம்
படுத்தும் பாட்டை
எண்ணி...!!!
பக்கம் பக்கமாக
மின் அஞ்சல்
அனுப்புகிறார்
தான் வாழும் இடத்தை
வர்ணித்து
படம் படமாக பிடித்துப்
போஸ் பண்ணுகின்றார்
நாகரீக உடையுடன்...!!!
ஆனால் நாளும்
பொழுதும் அழுகின்றார்
பட்டணத்து நாகரீகம்
முழுமையாக அறியாமல்...!!!
பிறரிடம் இருந்து
ஒதுங்கியே வாழ்கின்றார்
தன் தாழ்வு மனப்பான்மையால்...!!
அழகு தோற்றம் கண்டு
நெருங்கும் பெண்களும்
இவர் பேச ஆரம்பித்ததும்
முகம் சுழித்தே விலகுகின்றனர்..!!
பேச்சுத் தமிழ் பட்டிக்காடு
வாங்கோ இருங்கோ
உடைக்கும் பேச்சுக்கும்
சம்மந்தமே இல்லை
இவரால் மாற்ற முடியல
இந்தக் (கோ)போட்டுப்
பேசுவதை...!!!!!
மாறவும் முடியவில்லை
மறக்கவும் முடியவில்லை
வெறுக்கவும் முடியவில்லை
ஒதுங்கவும் முடியவில்லை
பணம் படுத்தும் பாடால்
பட்டணத்தை விட்டு..!!!
தினமும் புலம்பல் ராத்திரியில்
கனவில் ரசிக்கின்றார் பட்டிக்காட்டை
கவலையோடு நாட்களைக் கழிக்கின்றார்
பட்டணத்தில்....!!!!!