ஒற்றைத் துளி

முழுநிலவில்
மூட்டிய தீ வெளிச்சத்தில்
ஆடின எலும்புக்கூடுகள்
ருத்ர தாண்டவம்
மரங்கள்
இலைகளை உதிர்த்து
மரண பயத்தில்
மௌனமாய் இருந்தன
நிசப்த
அந்த இரவில்
நீயும் நானும்
நடந்து வந்தோம்
என்னமாய்
ஒரு கோட்பாடு .
நானின்னும் மரணிக்க வில்லை
நீயின்னும் ஜனிக்கவே வில்லை.
ஒற்றைத் துளியில்
இந்த பூகோளம் இயங்குவதை
கத்திச் சொன்னேன்
அத்துவான காட்டில்
அதை கேட்பதற்குத்தான் யாருமில்லை .

எழுதியவர் : சுசீந்திரன். (1-Oct-14, 8:30 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
Tanglish : otraith thuli
பார்வை : 66

மேலே