தக திமி தா - நாகூர் கவி

பெண்ணே....
நீ தலையை கோதினால்
வழுக்கையாய் தெருவில்
திரிவோர் ஏராளம்...

உனது ஆடைகளை
நீ சரி செய்தால்
தனது ஆடைகளை
கிழித்துக்கொண்டு
அலைவோர் ஏராளம்...

நீ அசைந்து
நடக்கையில்
உன்னால்
ஊனமுறுவோர் ஏராளம்...

நீ கை
தூக்கி காட்டிவிட்டால்
நூலில்லா பட்டம் போல்
காற்றினில் பறப்போர் ஏராளம்...

நீ சேலைக் கட்டி
சாலையில் சென்றால்
விபத்துக்கள் ஏராளம்...

நீ கொஞ்சம்
புன்னகைத்து விட்டால்
பைத்தியமாய் சிரிப்போர்
என்னை போன்றோர் ஏராளம்...!

எழுதியவர் : நாகூர் கவி (1-Oct-14, 9:16 pm)
பார்வை : 240

மேலே