காதலால் நிழலோடும் சாய்கிறேன் - இராஜ்குமார்

காதலால் நிழலோடும் சாய்கிறேன்
=================================

தனித்த பயணத்தில்
இனித்த காதலை
உரித்து கொஞ்சம்
சிரித்தே கொடுத்தேன்

விடையறியா கேள்வியை
கேட்க துணியா என்னிதழ்கள்
நானேயறியா உணர்வினை
தேகம் நிறைய அனுப்பியதோ ?

தற்சமய தடங்களில்
தவிக்க மறுக்கும்
தண்டனையை - மாறாத
மனதோடு தழுவுகிறேன்

தாழ்வில்லா தருணம்
அற்புத உணர்விற்கே
அடிபணிய - காதலால்
நிழலோடும் சாய்கிறேன்

- இராஜ்குமார்

நாள் : 1 - 1 - 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (2-Oct-14, 9:05 am)
பார்வை : 93

மேலே