எண்ணப் பறவைகள்
என் எண்ணங்கள் சிறகடிக்க
வானில் அங்கே பறவைகள் ஊர்வலம்.
இரண்டொரு நிமிடங்களில்
இருட்டிவிடும் நிலையிலும்
எங்கேதான் செல்கின்றன...
அந்த பறவைகள்!
தமது கூடுகளை அடைந்திடுமோ...
தத்தளிக்கும் குஞ்சுகளை
சிறகுகளால் சேர்த்துக் கொள்ளுமோ...
சிகரங்கள் கடந்த
சிறுகதைகள் உரைத்திடுமோ...
பருவநிலை மாறுதல்களால்
படுந்துன்பம் பாடிடுமோ...
ஒருவேளை களைத்து
அமர்ந்து அயர்ந்து உறங்க
காடு தேடி அலைந்திடுமோ...
இரண்டொரு நிமிடங்களில்
இருட்டிவிடும் நிலையிலும்
எங்கேதான் செல்கின்றன...
அந்த பறவைகள்!