பக்ரீத்

(குறள் வெண்செந்துறை)
வாங்கிவிடும் மூச்செல்லாம் "வாங்கென்றே" கண்டுதொழு
தாங்கிநிற்கும் பூமியினை தன்தலையால் தொட்டுஎழு
ஏந்தல் தியாகத்தை எந்நாளும் நாம் நினைவோம்
ஈந்துவக்கும் இன்பத்தை இந்நாளிள் நாம்பெறுவோம்
ஆமைபோல் ஐந்தடக்கி ஐந்துமுறை நாம்தொழுவோம்
பூமைய மெக்கா திசைநோக்கி தொழுதெழுவோம்