ஒரு விதமான தமிழன் நான்
![](https://eluthu.com/images/loading.gif)
தமிழ் நாடில் பிறந்து
வெளிநாடுகாரனுக்கு வேலை செய்யும் தமிழன்
தமிழ் வழியில் படித்து ஆங்கிலம் மட்டும் பேசும்
பச்ச தமிழன்
குறைவான சம்பளம் நிறைவான சந்தோசம் தூக்கி எரிந்து விட்டு
பல ஆயிரம் சம்பளத்திற்கு - பல சொந்தங்களை தூக்கி எறிந்த தமிழன்
உள்ளுரில் ஓனான் பிடிக்க தெரியாமல்
வெளிஊரில் யானை பிடிக்க கிளம்பும் ஒரு விதமான தமிழன் நான் !!