எப்படிப்பட்ட புத்தி சாலி நீங்கள் - எது புத்தி சாலித்தனம்

சில பொதுவான அளவு கோல்களால் தான் புத்தி சாலித்தனம் வறையரை செய்யப்படுகின்றது. புத்தி சாலித்தனம் என்பது கற்றுக் கொண்டதை ஞாபகத்தில் வைத்து ஒரு எழுத்து பிசகாமல் பரீட்சையில் எழுதுவது, மனப்பாடம் செய்து ஒப்பிப்பது, பாடப் புத்தகக் கணக்கை நன்கு போடுவது, ஆங்கிலத்தில் பேசுவது என ஒரு சில அளவு கோல்களால் தான் தீர்மானிக்கப்படுகின்றது. ஆனால், இவை மட்டும் தான் புத்திசாலித் தனமா? சொல்லப்போனால் மனப் பாடத் திறனுக்கும் புத்திசாலித்தனத்திட்கும் இடையில் எந்தச் சம்பந்தமும் கிடையாது என்கிறார் ஹவார்ட் கார்னர் எனும் உளவியல் நிபுணர். புத்திசாலித்தனம் என்பது தனித்துத் தோன்றுவதோ இயங்குவதோ கிடையாது. அது ஒரு விதமான திறன். சிக்கல்களைச் சரி செய்யும் ஆற்றல், புதியவற்றை உருவாக்கும் படைப்பாற்றல் இவை தான் அந்தத் திறன்கள் ஆகும் என்கின்றார் ஹவார்ட் கார்னர். அவர் எழுதிய மனதின் சட்டகங்கள் எனும் நூல் வழக்கமான கல்வித் திட்டங்களின் ஆன்மாவை உருக்கும் தன்மை கொண்டது. இதிலிருந்து, ஒருவருக்கு கல்வி பல விடயங்களை கற்றுத் தருவதை விட அவருடைய கற்பனைத்திறனை ஊக்குவிக்க வேண்டும் என்கின்றார் இவர்.

எழுதியவர் : புரந்தர (7-Oct-14, 5:49 pm)
சேர்த்தது : puranthara
பார்வை : 146

சிறந்த கட்டுரைகள்

மேலே