வாழ்க்கையை ரசிக்கப் பழகினால்
தோழர்களே..
வாழ்க்கையை
ரசிக்கப் பழகினால்
வருத்தங்கள்
வசந்தங்களாய் மாறும்..
தொலைக்காட்சியை
துண்டித்துவிட்டு
வெளியே வந்து
வான் பாருங்கள்..
இருண்ட ஆகாயத்தில்
உருண்டுபோகிறது
நிலா முட்டை..
ரசனையுடன்..இரா.அறிவானந்த காமராஜ்.