ஒன்றாக

கருவறை இவர்க்குப் பொதுவானது
காட்சி என்றும் எதிர்பார்ப்பது,
உருவினில் அழகின் இடமானது
உரைக்கும் முறுவல் மொழியானது,
பெருகிடும் அன்பே ஊற்றானது
பேசிடா தென்றற் காற்றானது,
திருவருட் தெய்வச் சிலையதுவும்
தீதிலாக் குழந்தையும் ஒன்றன்றோ...!