உந்தன் தாவணி சிறகுகள் - இராஜ்குமார்

உந்தன் தாவணி சிறகுகள்
========================

வாழும் நினைவுகள் - என்
வாழ்வினை அழிக்குமோ
வழியும் கனவுகள் - என்னில்
கற்பனை விதைக்குமோ

புன்னகை ரசிப்புகள் - புது
புல்வெளியாய் விரியுமோ ..?
பதியாத பாதங்கள் - சிறு
பனித்துளியாய் உருகுமோ ..?

வாசலின் நிழல்கள் - அழகு
வானவில்லாய் மின்னுமோ ..?
தாவணி சிறகுகள் - குளிர்
மேகமொன்றில் மிதக்குமோ ..?

- இராஜ்குமார்

நாள் : 30 - 11- 2012

எழுதியவர் : இராஜ்குமார் Ycantu (10-Oct-14, 7:02 pm)
பார்வை : 310

மேலே