நாளும் முயற்சி எடு

அடுத்தவரை குற்றம் சொல்ல
அரைநொடி போதுமடா
தன குற்றத்தை அறிந்தவன் ஞானியடா

வாக்கு சொல்வது எளிது
சொல்படி நடப்பது கடிது
முடிந்ததை சொல்வது இயல்பு
அதன்படி காப்பது மரபு

உன்னை வளர்த்து கொள்ள
தினம் தினம் பாடம் உண்டு
உன் தொலவியுமே
உன்னை செதுக்குவதை கண்டு

நீ மாறினால்
வெற்றி உனதாகும்
வெற்றி பெரிதல்ல
நிலையான கலையல்ல
என்றும் உனதாக்க
நாளும் முயற்சி எடு
தினம் தினம் பயிற்சி கொடு

எழுதியவர் : ருத்ரன் (10-Oct-14, 6:40 pm)
Tanglish : naalum muyarchi edu
பார்வை : 84

மேலே