விடா முயற்சி
மன்னிக்க தெரிந்திருந்தால்
மரணம் வென்றிடலாம்
சாதிக்க தெரிந்திருந்தால்
சரித்திரம் செய்திடலாம்
முடியாது என்பதெலாம்
முயலாதவன் சொன்ன விதி
முடியும் என்பதே
என்றும் முதல் வெற்றி
எறும்புக்கு ஓய்வு இல்லை
காக்கைக்கு குடும்பம் இல்லை
கழுகுக்கு எதிரி இல்லை
என்றும் உனக்கு நிகர் இல்லை
என்றே நீ தொடங்கு
உனக்கான முயற்சி ஒன்றை
தோல்வி கண்டாலும்
அதிலும் அறிந்து கொள்
வெற்றிக்கான பயிற்சி என்று