நட்பு

நம் நட்பை பற்றி கவிதை எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் கவிதையே கலை இழந்தது ..!!!
நம் நட்பை பற்றி பாட்டு எழுத நினைத்தேன் ...
நம் நட்புக்கு முன் பாட்டின் பல்லவிகளே பின்தங்கியது...!!!
யோசித்தப்படி வானத்தை நோக்கினேன் ......
வானத்தில் உள்ள மேகக்கூட்டங்கள் என்னை கண்டு சிரித்தது ....!
"உங்கள் நட்பே ஒரு கவிதை ...
அந்த கவிதைக்கே கவிதை எழுத நினைக்கிறாயே" என்று ...!!!
எனவே நம் நட்போடு உன் ஓவியத்தை வரைந்தேன் .....
இந்த படைப்போடு இணைத்தேன் ..!!!

எழுதியவர் : வித்யா (12-Oct-14, 3:48 pm)
Tanglish : natpu
பார்வை : 247

மேலே