பழனிகுமார் அய்யாவிற்கு வாழ்த்துகள் -சந்தோஷ்

புது உலகத்தை கண்டிடும்
சிறுமழலையின அழகு சிரிப்புகள்.
சிறுமழையில் நனைந்து
பெருகிடும் உற்சாக சிலிர்ப்புகள்.

ஆதவனிடம் உறவாடிய
நீர்த்துளியின் வானவில் கோடுகள்
அந்திமாலை உருவாக்கிய.
புதுகவிஞனின் கவிதை வரிகள்.

கடற்கரை அலையில் நனைந்து
கவலைகளை மறக்கும் தருணங்கள்
அதிகாலை உதயசூரியனை நினைத்து
விடியலுக்கு துடிக்கும் ஆர்வங்கள்.

இவையாவும் தூய்மையான
கலப்பிடமில்லா உணர்வுகள்.
இவ்வாறான உணர்வுகள்
எழுதிடும் பல சிந்தனைகள்

****

சமூகம், மக்கள், வாழ்வு
இவைகளை நினைத்து
இவைகளை சிந்தித்து
இவைகளை திருத்திட
இவைகளை மாற்றிட
உருவாகி வெளிவருகிறது
ஓர் உண்மை எழுத்தாளரின்
உணர்வுப்பூர்வமான உணர்வலைகள்.

”கவிமுரசு” திரு. பழனிகுமார் அய்யாவின்
”உணர்வலைகள்” நூல் பல சிறப்புகளை
பெற்றிடவும் பல சமூகமாற்றங்களை
தந்திடவும் வாழ்த்துகிறேன்.

இன்று பிறந்தநாள் காணும்
அய்யா பழனிகுமார் அவர்கள்
வாழ்வாங்கு வாழ வாழ்த்துகிறேன்.


” இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ” அய்யா



-இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா. சந்தோஷ் குமார் (12-Oct-14, 5:11 am)
பார்வை : 1913

மேலே