+வருத்தம் கொடுக்கும் வரிகள்+
இணைந்த போது தெரியாது
இணையம் இவ்வளவு பெரிதென்று
இணக்கம் கொடுத்து பலபேரின்
பிணக்கம் தீர்க்க உதவியது
முகம் காணா உறவுகளை
நிதம் அறிமுகப் படுத்தியது
மூச்சுக்கு நூறு முறை
நட்புக்களை நினைக்க வைத்தது
யாரோ செய்த தவறால்
வருந்திப் பிரியும் வேளை
வருந்தி எழுதிய வார்த்தைகள்
வருத்தம் கொடுக்கும் வரிகள்......