வெண்மை மறக்கும் கருப்பு காக்கி - இராஜ்குமார்
வெண்மை மறக்கும் கருப்பு காக்கி
================================
நாங்கள் இணைந்ததே
சட்டம் சொல்லும் சாதனை
என்பதை என்றோ மறந்தோம்
அதை இன்றோ மறுப்போம் ..
சமாதானம் சொல்லும்
சமிக்கை வெறுத்தோம்
மூலதனம் கொடுத்தால்
இரு கை கொடுப்போம்
உள்ளே வா - என்
உள்ளங்கை பார்
வெளியே போ - என்
மிரட்டலை சேர் ..
வருமானம் சேர்த்து பின்
வட்டிக்கு விடவே - உன்
வயறு எரிய வழிதோறும்
வழிப்பறி செய்கிறோம்
என்றும் நாங்கள் இணையோம்
உங்கள் உணர்வை மதியோம்
கம்பி எண்ணுபவன்
எங்களுக்கு எதிரியே
நம்பி கொடுத்தவன்
வெளிவருவது உறுதியே
தாள்களில்லா வழக்கு
கிடப்பில் ஓர் கணக்கு
சட்டத்தின் சமாதானம்
முழுமையாய் சரியும்
காக்கியும் கருப்பும்
விரக்தியாய் விரியும்
வழக்கின் வயது
எங்கள் கையோடு
நீயளிக்கும் கையூட்டின்
கைபிடித்தே நகரும் ..
ஆவணம் மறைக்கும்
ஆணவ அதிகாரியாய் நாங்கள்
வெண்மையின் தன்மை
ஒழிப்பதே எங்கள் மேன்மை
மறைப்பதே புது திறமை
இப்படிக்கு காக்கி கருப்பு
- இராஜ்குமார்