வித்யா-க்கு பிறந்தநாள் வாழ்த்து - சந்தோஷ்
பாரதியையும் கம்பனையும்
மிஞ்சிட துடிக்கும்
பல கவிதாயினிகளில்
இவள் ஒரு வித்தியாசமானவள்.
கம்பனை அழைத்து
வள்ளுவனை பாடச்சொல்வாள்
பாரதியை அழைத்து
கண்ணதாசன் பாடலை கேட்பாள்.
கண்ணனிடம் வம்பிழுத்து
சோழனிடம் நீதி கேட்பாள்.
ஏன் இப்போதும் கூட பாருங்களேன்
”நக்கீரன் இப்பொதெல்லாம்
ஏன் நெற்றிக்கண் திறப்பதில்லை”
வைரமுத்துவிடம் வினாயெழுப்பி
வைராக்கியமாக செல்ல மோதலாம்.
வித்யா..........!!
நீ கவிதை பாடினால்
தீ தென்றலாகும்
தென்றல் தீயாகும்
மாயமென்ன செய்தாயோ ?..பேனாவில்
மந்திரமென்ன வைத்தாயோ..? -நீ
சுந்தர தமிழில் எழுதினால்..
அந்தரத்தில்...வானவில்
வண்ண வண்ணமாய்
கைத்தட்டுகிறதாம்.. !
சூரியன்
வெட்கப்பட்டு வெட்கப்பட்டு
மேகத்தில் ஒளிகிறானாம்.
நீ என் தங்கை மட்டுமல்ல
தங்ககையான என் தோழி..!
தோழியான என் தங்க தங்கை...!
தினமும் உனை
ஒரு முறை நிச்சயம்
வாழ்த்தியிருக்கிறேன்
இன்று கூடுதலாக
ஓராயிரம் முறை
வாழ்த்துகிறேன்.
பூக்களை சேர்த்துக்கட்டும்
திறன் என்னிடம் இல்லை.
பாக்களை பூட்டி
எழுத்து வண்டியில்
வாழ்த்துப்பூக்களாய் நிறைத்து
வழியனுப்பி வைத்துவிட்டேன்.
விழி மூடிப் பார் - இந்த
பாரெல்லாம் உனை வாழ்த்துக்கிறதா ?
விழி திறந்துப்பார் -வித்யா..!
என் வாழ்த்துப்பாவில்
தமிழ் அன்னையின்
ஆசிர்வாதத்தினை பார்த்தாயா ?. ?
நீடித்த ஆயுளும்
நிம்மதியான வாழ்வும்
வரமாய் பெற்று,
கல்வியில் சிறந்து
பாரினில் தமிழால்
தமிழ் இலக்கியத்தினால்
சீரும் சிறப்புமாக
புகழோடு வாழ வாழ்த்துக்கிறேன்.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வித்யா..!
-இரா.சந்தோஷ் குமார்.