என் தமிழ்
தமிழ் மொழி பற்றிய மற்றொருஎன் பள்ளி பருவ கவிதை! (2009)
சரியான வழிகாட்டல் இல்லாததால் என் பேனா எழுதுவதில்லை!! சில சமயங்களில்
தாய் பாசம் வேண்டாம்!
தந்தை பாசம் வேண்டாம்!
தன்னிலை மாறா- என்
தமிழ் பற்று போதும்!
தாய் தந்த பாலை
உமிழ்கின்ற நேரம்!
உயிர் நீங்கிய என்னுடல்
உன் காலடி சேரும்!
தமிழ் என்று வந்தபின்
உயிர் பற்றி பயமில்லை!
உடலில் உறுதி உள்ள வரை!
தமிழ் மீது உறுதி கொண்டிருப்போம்!
தமிழுக்கு இதுவும் அகராதி!
தமிழர்களில் நானும் ஒரு பாதி!