என்பா

வீரம் விவேகம் விரைவு தெளிவுடன்
தீரம் திறமை இணைந்தாலே-பாரமில்லை
வாழ்க்கை வளமாகும் வரவும் நிறைவாகும்
சேர்க்கும் சிறந்த சுகம் .

போட்டி மறந்து பொறாமை யதுமறந்து
தீட்டி அறிவை திடம்செய்தால் -வாட்டும்
கவலைகள் நீங்கும் கனவுகள்மெய் யாகி
குவலயம் ஓங்கும் தழைத்து.

உயர்விழி வென்ப தொதுக்கும் செயலாம்
உயர்வினை மாய்க்கும் விஷமாம்-அயரா
துழைத்தல் அழகாம் உருப்படியாய் யோசித்
தழைத்தணைத்தா லுண்டோ விழப்பு?.

எழுதியவர் : அபி (16-Oct-14, 1:06 pm)
பார்வை : 151

மேலே