என் கிறுக்கல்களின் சில சிதறல்கள் - 10
சொட்டுசொட்டாய் கொட்டும் மழையினில்
சட்டைதுவங்கி,உள்வைத்திருந்த
கைக்குட்டை வரையினில்
பொட்டுக்கூட மீதமில்லாதபடி
கொட்டகையின் கூரையது போல்
முழுதாய் நனைந்த நிலையினை
மொட்டுமலரதன் பட்டு மனம் கொண்ட
என் செல்ல சிட்டுனக்கு குறுந்தகவலில்
பட்டும்படாமலும் பிட்டு பிட்டு சொல்லாது
பட்டுபட்டென போட்டு உடைத்ததனால்
விட்டு விட்டு துடித்துவந்த உன் இதயம்
உயர்மட்ட பதட்டத்தினில் விடாது துடித்திட..
"வீடு எட்டியதும் உடன் ஆடைமாற்றி
நன்றாக தலை துவட்டிடு என்கின்றாய் "
தண்டம் நான் தலைக்கவசம் மறவாத
முண்டம் என்பதை முழுதுமாய் மறந்து ...
அதுசரி,
கோடை விடுமுறையில் மகிழ்வூர்ந்தினில்
மகிழ்ச்சிக்காய் பயணம் செய்திடுகையில்
பார்த்து நனையாமல் செல் என்று துணைக்குன்
காதலை கு(கொ)டையாய்" கொடுத்தவள் தானே நீ
நல் வெதுவெதுப்பான சூழலிலேயே
உன்னை நீ கிடத்திக்கொள் என்கிறாய்
நின் நினைவின் சூடதுதரும் கதகதப்பையும்
கடந்த ஓர் வெதுவெதுப்பும் வேண்டுமோ ???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
