ஆபீஸ்

மனதை கஷ்டபடுத்த
அவர்களுக்கு மட்டுமே உரித்தானது

விடைகளும் மறைக்கப்படும்
அவர்களின் கேள்வியில்


போர் துவங்கும் மனதில்
பலி நான் ஆவேன் என்று தெரிந்து


மௌனம் அப்போது பிடிக்கும்
இல்லையேல் கண்ணீர்க்கு பிடிக்கும் என்னை

ஆறுதல் தேடி மனம் செல்லும்
பாதையே மறந்து

மன்னிப்பு கேட்கப்படும்
கோபத்தின் வெளிப்பட்டால் வீட்டில்

மழலை சிரிப்பு சத்தம் கேட்டு
தணிக்கப்படும் எரிமலையான நெஞ்சம்

எழுதியவர் : அனுசா (18-Oct-14, 4:52 pm)
Tanglish : office
பார்வை : 244

மேலே