துகிலாத நினைவுகள்--போட்டிக் கவிதை

சந்திக்க துணிவற்ற பொழுதுகளில்
யதேட்சயாக நிகழ்ந்து விடுகிறது
அந்த சந்திப்பு.

வாழ்வின் வலி கூட்டும் நிமிடங்களில்
அதுவும் ஒன்றாகிப் போன பின்
பேசுவதற்கு எதுவும் இருக்காதுதான்.

வார்த்தைகளை விழுங்குதல்
இருவருக்கும் பழக்கமில்லைதான்
பழகிக் கொள்.

கண் பார்த்து நோக்க முடியாவிடத்து
எங்கேனும் வேடிக்கை பார்.

புன்னகைக்க சற்று கடினப்படும் இடங்களில்
மேலும் சில சொட்டு விஷத்தை இட்டு
அந்த நிமிடத்தைக் கரைத்துவிடு.

ஒரு முத்தத்தின் நீட்சியில்
நம்மை மறந்த ஒரு கணம்
உனக்கு நினைவுக்கு வரலாம்
கண்டுகொள்ளாதே.

வெறுமையின் வலியை
எனக்கு உணர்த்தியதே நீதான்
உனக்கு நான் சொல்லித்தர வேண்டியதில்லை
நீயே பார்த்துக்கொள்.

குருதி கொப்பளிக்கும் ஞாபகங்களில்
உன்னை மீட்டெடுப்பது சிரமமாகத்தான் இருக்கும்
வேறு வழியில்லை.

ஒரு கவிதை இரண்டாக உடைந்த பிறகு
அதன் அர்த்தத்தை தேடி
நீ ஒரு புறமும் நான் ஒரு புறமும்
பயணப்படும் சூழலுக்கு உட்பட்டுவிட்டோம்.

இதுதான் கடைசி சந்திப்பென
உறுதிப்படுத்திப் பிரியும் இறுதி நொடிகளில்
தயவு செய்து அழுதுவிடாதே
பிறகு அங்கேயும்
நமக்கான கவிதையொன்று
உருவாகி விடும்.

---த.ஆனந்த முருகன்---
M.E. Engineering Design - 1st year
E-mail : anandhthamizh@gmail
Mob:9600725969

கல்லூரி முகவரி :
P.S.R. Engineering College, Sevalpatti, Sivakasi, Tamil Nadu 626140
ஃபோன்:04562 239 091

எழுதியவர் : த.ஆனந்த முருகன் (18-Oct-14, 3:36 pm)
பார்வை : 119

மேலே