கவிதைத் தலைப்பு - தாய் மொழி வழிக் கல்வி

அறியாமை இருள் அகல
அகண்ட ஜோதியாய் ஒளிர்ந்து
அகரத்து வழியே பாதை அமைத்து
சிகரத்திற்கும் மேலாக பரவியுள்ள
சீர்க் கல்வியின் பெருமைதனை
சிதிலம் இல்லாமல் தாய்மொழி வழியில்
சிறப்புற வைப்பது மேன்மையாகும்

அவரவர் மொழிக்கேற்ப கல்வியினை என்றென்றும்
ஆறாம் மாறாமல் பயிற்றுவிப்பதும் - காலத்திற்கேற்ப
உரமிட்ட நிலமதைப் போல் - கல்வியின் தரத்தை
உருப்பெற வைப்பதும் தாய்மொழி வழிக் கல்வியாகும்.

மொழி வளத்திற்கு ஏற்ப வழிமொழியும்
மாசற்ற கல்வியின் நோக்கினை
நேசமற்ற முறையில் பயிலத் தூண்டுவது
நோயுற்றவனை வாழ்த்துதல் போலாகும்.

எம்மொழியாயினும் அம்மொழிகேற்ப
ஏற்றமிகுக் கல்வியாய் நிலைப்பெறும் போது
உற்றமிகு ஆற்றலுடன் பயிற்றுவிப்பது
கற்றவர்களின் கடமையினை உணர்த்துவது
தாய்மொழி வழிக் கல்வியாகும்.

கோலுக்கேற்ற செடிகள் படர்தல் போல்
குழந்தைக்கேற்ற மொழிவளக் கல்வி
குறையில்லாமல் பேணுவதும் அவரவர்
தாய்மொழி வழிக் கல்வியாகும்.

கல்வி அறிவே இல்லாதவர்கள்
கொடும் சினத்திற்கு மட்டும் அடிமைப்பட்டு
கெடும் கேடுகளை விதைப்பவர்கள்
எம்மொழிக் கற்று வாழ்கிறார்கள்?

தாய்ப் பசுவினை அறிந்து துள்ளிவரும்
தளிர்க்கன்று பாலருந்த அறிதல்போல்
தாய்மொழி வழி அறிந்துக் கல்விப் பயில
தளரிகளுக்குத் தடை விதித்தல் நன்றன்று.

எழுதியவர் : ச. சந்திர மௌலி (18-Oct-14, 7:12 pm)
சேர்த்தது : சந்திர மௌலி
பார்வை : 183

மேலே