தமிழன்

பொறாமை உடையவனல்ல
பொறுமையும் பொறுப்பும் உடையவன்!
பேராசை உடையவனல்ல
பேணிக்காத்த பொருளை தானமளிப்பவன்!
ஏமாற்றுபவனல்ல ஏந்திபிழைப்பவனுமல்ல
ஏழுகடற் சிறப்பினை உடையவன்!
கஞ்சனாய் இருப்பவனல்ல
கடனில்லாமல் வாரி வழங்குபவன்!
ஆடம்பரமாய் இருப்பவனல்ல
ஆசைகளை துறந்து மனிதனானவன்!
சாதி மதங்கள் நாடுபவனல்ல
சாதனைகள் பல புரிபவன்!
சண்டையிட அலைபவனல்ல
போரெனில் வீரனாய் வெல்பவன்!
தமிழ்காற்றை சுவாசிக்கும்
நேசிக்கும் அவனே தமிழன்!

எழுதியவர் : திவ்யா.பி (20-Oct-14, 9:02 pm)
சேர்த்தது : p divya
பார்வை : 57

மேலே