முழு உடும்பு, முக்கால் காடை, அரை மாடு , கால் ஆடு

முழு உடும்பு, முக்கால் காடை, அரை மாடு , கால் ஆடு ...

"இதென்ன சொலவடை... புதுசா இருக்கே .." என்ற வியப்பில் , இதை சொன்ன நெல்லை வட்டாரத்தை சேர்நத அந்த நண்பரிடமே விளக்கம் கேட்டேன்..

"உடும்ப சாப்பிட்டா அதோட சத்து முழுசா அத சாப்பிடறவங்களுக்கு கிடைச்சுடும் ; காடையை சாப்பிட்டா முக்காவாசி சத்துதான் கிடைக்கும்; மாட்டை சாப்பிட்டா பாதி சத்து; ஆட்டை சாப்பிட்டா வெறும் காவாசிதான்...நமக்கு சத்து கிடைக்கும்கிறது இதோட அர்த்தம் சார்" ன்னார். இது ஒரு புதிய சங்கதி எனக்கு.

ஆனா, உடும்ப இன்னைக்கு கண்ணுலகூட பார்க்கமுடியாது ; காட்டுல மேயற காடய புடிக்காம, கூண்டுலதான் வளர்க்கறாங்க .மாடும்,ஆடும் போஸ்டர்,காகிதம்னு வேண்டாததைத்தான் சாப்பிடுது...
இதான் இன்றைய நிலைமை. எங்கபோயி சத்து கிடைக்கிறது இதுல.?

ஆக ... பழமொழிகளை , பலமில்லாத மொழியாக இன்றைககு மாற்றியதும்
நம்மோட சாதனைதான்..

வாழ்க வளமுடன்.

எழுதியவர் : முருகானந்தன் (21-Oct-14, 10:22 pm)
சேர்த்தது : MURUGANANDAN
பார்வை : 205

மேலே