என் காதல்

உன் கண்ணோடு
பேச காத்திருந்தேன்!
என்
கண்ணுக்குள் நீ
நுழைந்தாய்!
உன் இதழோரம்
வாழ்த்து வந்தேன்!
புன்கையால் என்னை
சிறைப்பிடித்தாய்!
உன்பக்கம் நெருங்க
தயங்கினேன் - பக்கம்
வந்து தொட்டுப்பேசி
பயமுறுத்தினாய்!
என் காதலை
சொல்ல நினைக்கிறன்!
ஏனென்றால்,
அதையும் நீயே
சொல்வாய் என்று!
தவம் இருக்கிறேன்
பெண்ணே- உன்
கண்கள் என்னை
தேடாதா என்று!
பெண்ணே,
உன்னை கண்ணுக்குள்
போதிவைப்பேன்
இமைகளின் உதவியோடு!
இதயத்தில் இடம்தருவேன்
என் இதயத்துடிப்பின்
இசையோடு!
என்னை புரிந்துகொள்ளாமல்
செல்லும் பெண்ணே-
சற்றேப்பொறு!
என் கண்ணீரில்
தெரியும் பிம்பம்
நீயே!
நீசுவாசித்த காற்றின்
வெப்பத்தில் வாழ்கிறேன்
சென்று விடாதே!
பெண்ணே உன்னால்தான்
நானும் வாழ்கிறேன்!
உன்
புன்னகையை சேமித்த
என் இதயத்தை
உடைக்கிறேன் பெண்ணே!
கூடுதலாய் உன்
இதயமும் வேண்டி!

என் பேனாவிற்கு
உந்தன்மீது
வருத்தமாம்-ஆமாம்
உன் வெட்கத்தை
எந்த நிறத்தில்
எழுதுவதென்று!!!

நான் சொல்கிறேன்
நீயோ மறுக்கிறாய்!
நான் துடிக்கிறேன்
நீயோ வெறுக்கிறாய்!
அட,
இப்பொழுதும் என்மனது
சொல்கிறது-
வெறுக்கும்போதும்
நீ அழகிஎன்று!!!
பெண்ணே,
ஒருநிமிடம் பொறு
கண்களை இமைத்துக்கொல்கிறேன் !
ஒருநாள் பொறு
தூக்கத்தை திரும்பபெருகிறேன்!
ஒருவாரம் பொறு.......
ஒருமாதம் பொறு.......
அடடே,
ஒருநிமிடம் முடிந்துவிட்டதே !!!

பெயர் : இரா.கார்த்திக் (vibranthan)
கல்லூரி : தமிழ்நாடு பொறியியல் கல்லூரி
முகவரி : இரா.கார்த்திக்
: மூன்றாம் ஆண்டு கணினி அறிவியல் & பொறியியல்
: தமிழ்நாடு பொறியியல் கல்லூரி
: கருமத்தம் பட்டி
: கோயம்புத்தூர் - 641659

எழுதியவர் : vibranthan (21-Oct-14, 10:36 pm)
Tanglish : en kaadhal
பார்வை : 96

மேலே