தீபாவளி திருப்புகழ்

மின்னும் ஒளியென சிறந்திடும் புதுமைகள்
*******பொன்னாய் மிளிர்ந்திட பழமைகள் களைந்துநாம்
*******கண்ணை பறித்திடும் புதுபுது துணிகளை- அணிந்தேதான்
விண்ணை நிலந்தனை மலைகளை மரங்களை
*******கண்ணை செவிதனை கரங்களை மனமதை
*******எண்ணை எழுத்தினை இயக்கிடும் செயலதைத் -தருவோனை
எண்ணத் தெளிவொடு தினந்தினம் வணங்கியே
*******வண்ண உலகினில் வறுமையும் ஒழிந்திட
*******மண்ணும் செழித்திட மனிதரும் உயர்ந்திட -இதுநாளில்
தன்னை அறிந்திடும் தரமிகு அறிவதில்
*******உன்னை அறிந்திடும் தவங்கொடு வரங்கொடு
*******தன்னேர் இலாவொரு தலைவனே முதல்வனே -எனக்கேட்டு
நன்மை விளைந்திடும் முறையினில் உலகினில்
*******உண்மை உளத்தொடு இணைந்துநாம் இனிமையாய்
*******வன்மம் ஒழித்தினி வளத்தொடு தளைத்திட -முனைவோமே
தின்மம் உடலினில் திறமையாய் உழைத்திட
*******பன்மை மறந்தினி ஒருமையில் ஒடுங்குவோம்
*******இன்பம் மலர்ந்திடும் இருளதும் மறைந்திடும் -இனிமேலே

எழுதியவர் : அபி (22-Oct-14, 12:00 pm)
பார்வை : 115

மேலே