வலிநாளே

கடித்த முறுக்கால் பல்லு முடைந்திட
வெடித்த வெடியால் காதுங் கிழிந்திட
அடித்த மழையால் நெஞ்சங் கலங்கியேத் ...தடுமாறி !

பிடித்த படத்தில் காட்சி சொதப்பிட
ஒடிந்த இதயங் கண்டு நொறுங்கிட
இடிந்து இளைஞ னுள்ளஞ் சுருங்கிடல் ...முறைதானோ !

குடித்த மனிதன் வாந்தி எடுத்திட
துடித்த மனையாள் கண்ணுங் கசிந்திட
பிடித்த உணவும் நஞ்சாய்த் தெரிந்திடும் ...நிலைகாண்பாய் !

வயிற்றில் வலியும் வந்து பிசைந்திட
பயத்தில் வியர்வைக் கொட்டி வடிந்திட
துயரங் கொடுக்கும் இந்நாள் வெறுத்திடும் ...வலிநாளே !!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (22-Oct-14, 5:05 pm)
பார்வை : 185

மேலே